நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாளாக அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என சொல்லிவிட்டு வராமல் இருந்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று அவர் அரசியலுக்கு வருவதற்கான உறுதியான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் நடிகர் விஜயையும் அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ சி விஜய் மக்கள் இயக்கம் பெயரில் கட்சியை பதிவு செய்து அது விஜய்க்கே பிடிக்காத நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டிதான் இந்த படம்.
மயிலாடுதுறையை சேர்ந்த சில விஜய் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் மொட்டை போடுகிறேன் என மொட்டை போட்டு அது சமூக வலைதளங்களில் அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.