விஜய் ரஜினி ரசிகர்கள் சண்டை! கொலையில் முடிந்த விவாதம்!

634

கொரோனாவுக்காக அதிக நிதிக் கொடுத்த நடிகர் யார் என்ற விவாதத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் லட்சக்கணக்கானவர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்தது யார் என்ற சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்தது விஜய்யா? ரஜினியா? என்ற வாக்குவாதம் இரண்டு இளைஞர்களுக்கு இடையே முற்றி கொலையில் முடிந்த சம்பவம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான யுவ்ராஜ் மற்றும் அவரது நண்பர் தினேஷ் ஆகியோர் முறையே விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் என சொல்லப்படுகிறது.குடிபோதையில் இருந்த் இவர்கள் இருவரும் தங்கள் அபிமான நடிகர்களில் யார் அதிகம் நிவாரண நிதி கொடுத்தது என சண்டைபோட்டுள்ளனர். அப்போது விவாதம் முற்றவே தினேஷ் யுவ்ராஜைப் பிடித்து தள்ளி விட்டுள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே யுவ்ராஜ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் யுவ்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தினேஷைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும்தான் இதுபோல சண்டையில் ஈடுபடுவார்கள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகருக்கும் சண்டை ஏற்பட்டு கொலை வரை சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  சீமான் 5 லட்சம் கொரோனா நிதியுதவி
Previous articleஇந்திய வீரர்கள் அணிக்காக விளையாட மாட்டார்கள்! சுயநலவாதிகள்! பாகிஸ்தான் வீரர் கருத்தால் சர்ச்சை
Next articleபன்னிரண்டாம் வகுப்பில் நீங்க இந்த பிரிவுகளில் படித்திருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு தற்காலிகமா சுகாதாரத்துறையில் வேலை!