cinema news
அம்மா ஆப்பரேஷனுக்கான பணத்தில் கட் அவுட் வைத்தேன் – அடி வாங்கிய விஜய் ரசிகர் குமுறல் (வீடியோ)
பிகில் பட ஆடியோ விழாழ்வில் நடந்த தள்ளுமுள்ளில் போலீசாரிடம் அடிவாங்கிய விஜய் ரசிகர் ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் உள்ளே நுழைய முயன்ற போது போலீசார் தடியடி நடத்தி அவர்களை தலை தெறிக்க ஓட விட்டனர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. அதிக டிக்கெட் விற்றதே இதற்கு காரணம் என விஜய் ரசிகர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில், தன் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்திருந்த ரூ.1.5 லட்சம் பணத்தில் விஜய்க்கு 80 அடியில் கட் அவுட் வைத்தேன். ஆனால், போலீசாரிடம் அடி வாங்கி தலை தெறிக்க ஓடி வந்தேன்’ என ஒரு தீவிர விஜய் ரசிகர் ஒருவர் புலம்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அம்மா ஆப்ரேஷனுக்கு வச்சிருந்த காசை எடுத்து உன்னை யாருடா விஜய்க்கு பேனர் வைக்க சொன்னா? சினிமாவை சினிமாவா பாருங்கடா முட்டாள்… pic.twitter.com/7xI5om0vlt
— Prabhakaran Kamaraj (@wolfprabhakaran) September 21, 2019