Vijay banner

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் – விஜய் சொன்னது என்னாச்சு?

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது.

இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இனிமேல் சாலைகளில் வைக்க வேண்டாம் என அரசியல் கட்சிகள் தங்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்டோரும் தங்களுக்கு பேனர்கள் வைக்கக் கூடாது என அவர்களின் ரசிகர்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியன் சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, அம்மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு முறையான அனுமதி பெறவில்லை எந்த் தெரிகிறது. எனவே, விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஜெயகார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் கூறியதை அவரின் ரசிகர்களே கேட்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.