Connect with us

விஜயை விமர்சித்த நீதிபதியின் கருத்துக்களை நீக்கிய ஐகோர்ட்

Entertainment

விஜயை விமர்சித்த நீதிபதியின் கருத்துக்களை நீக்கிய ஐகோர்ட்

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.

இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்துமாறு கூறப்பட்டது.

இதையடுத்து, காருக்கு இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த அபராதத் தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்குமாறும் தெரிவித்தார்.

நீதிபதியின் இந்த கருத்து தன் மனதை பாதிப்பதாக கூறிய விஜய் அந்த கருத்துக்களை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு விஜய்க்கு எதிராக நீதிபதி சொன்ன கருத்துக்களை இன்று நீக்கி உத்தரவிட்டது.

பாருங்க:  பெரிய நடிகர்கள் என்பதால்தான் அப்படி காட்சி வைக்க வேண்டியதாயிற்று

More in Entertainment

To Top