Connect with us

பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் புகார்

Entertainment

பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் புகார்

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய்பாபு. இவர் 1983 முதல் குழந்தை நட்சத்திரமாகவும், வளர்ந்த பிறகு பல்வேறு விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

மலையாளத்திரையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் பரிட்சயமானவர் இவர். இவரின் நடிப்பில் ஆடு, ஆடு 2, ஹோம், அந்தாக்‌ஷரி பிலிப் அன்ட் தி மங்கி பென், பெருச்சாழி, உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்துள்ளன.

இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. இந்த நிலையில் மலையாளத்தில் ஒரு நடிகை இவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக அவரது ப்ளாட்டுக்கு வரவைத்து பல முறை தவறாக தன்னிடம் நடந்து கொண்டதாக அந்த நடிகை கூறியுள்ளார்.

இந்நிலையில் விஜய்பாபு தனது சமூக வலைதள பக்கங்களில் கூறி இருப்பதாவது,  நான் தயாரித்த ஒரு படத்தில் மட்டுமே அவர் நடித்தார். அந்த படத்தின் வெற்றிவிழாவுக்கு அழைத்தும் அவர் வரவில்லை. அதன் பின் அந்த நடிகைக்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை. எனக்கு வளர்ச்சி பொறுக்காதவர்களின் சதி இது என விஜய்பாபு கூறியுள்ளார்.

பாருங்க:  கோயில் நிகழ்ச்சிகளில் ஆடல் பாடலுக்கு தடை

More in Entertainment

To Top