cinema news
விஜய்க்கு மகன் தெரிவித்த வாழ்த்து
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இவர் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் மட்டும் இணைந்து நடித்துள்ளார். மற்ற படங்களில் இவர் நடித்ததில்லை. இவர் மேற்படிப்பை வெளிநாட்டில் படித்து வருகிறார். தந்தை விஜய்க்கு இவர் ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 வருடங்களை நிறைவுசெய்து, அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதற்கு வாழ்த்துகள் அப்பா. நான் உங்களுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் பெற விரும்புகிறேன் என தந்தை விஜய்க்கு மகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.