விஜயை மறக்க முடியாது- நாசரின் நெகிழ்ச்சி

24

நடிகர் நாசரின் மூத்த மகன் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ஈசிஆரில் விபத்துக்குள்ளானர். உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தவருக்கு எல்லாமே கிட்டத்தட்ட மறந்துவிட்டது போல் ஆகிவிட்டதாம். ஆனால் தீவிர விஜய் ரசிகரான அவருக்கு நடிகர் விஜய்யின் ஞாபகம் மட்டும் இருந்ததாம்.

நாசரின் குடும்பத்தினர் தனது மகன் அவரது நண்பர் விஜய் ஆனந்த் என்பவரை நினைக்கிறார் என நினைத்தார்களாம் ஆனால் விஜய் விஜய் என்று சொன்னதால் விஜயே ஒரு பிறந்த நாளுக்கு அவரை நேரில் வந்து வாழ்த்தி சென்றாராம்.

இன்றும் விஜய் பாடல்களைத்தான் நாசரின் மகன் வீட்டில் பார்த்துக்கொண்டிருப்பாராம். விஜயை என்றும் மறக்க முடியாது என நாசர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதை நாசரின் மனைவி கமீலா நாசரும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

பாருங்க:  எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை - வைரலாகும் புகைப்படம்
Previous articleகுட்டி பவானியின் அடுத்த அதிரடி
Next articleகலெக்டர் ஆகும் துப்புரவு தொழிலாளி