எப்பதான் முடியுமோ! பிகில் இசை வெளியீட்டு விழா… டிரெண்டிங்கில் ‘தலசாம்ராஜ்யம்’

201

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து வரும் நிலையில், டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் அஜித் தொடர்பான ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் நயன்தாரா, ஆனந்தராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

எனவே, சமூக வலைத்தளமான டிவிட்டரில் #BigilAudioLaunch என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது. 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் இதற்கு எதிராக களம் இறங்கிய அஜித் ரசிகர்கள் #தலசாம்ராஜ்யம் என்கிற ஹேஷ்டேக்கில் டிரெண்டிங்கில் கொண்டுவந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஹேஷ்டேக்கில் டிவிட் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் 2ம் இடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  கைதியின் டைரி படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர் கொடுத்த சர்ப்ரைஸ்