Entertainment
நேற்றுடன் விஜய் நடிக்க வந்து 29 வருடங்கள் நிறைவு
நடிகர் விஜய் நடிக்க வந்து நேற்றுடன் 29 வருடங்கள் நிறைவு பெறுகிறது. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி வெளியான படம் நாளைய தீர்ப்பு. இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் விஜய். அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக விஜய் அவரின் அப்பா படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் விஜய்க்கு கதாநாயகனாக முதல் படமாகும்.
அதன் பிறகு ரசிகன், விஷ்ணு என பல படங்களில் நடித்தார். அதன் பின் பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். இன்று தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத கதாநாயகனாக விஜய் வலம் வருகிறார்.
முன்னணி நடிகராக வசூலில் நம்பர் 1 நடிகராக திகழ்கிறார்.
இவரது சினிமா கேரியரில் 29வது ஆண்டுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
