cinema news
விஜய்யின் 66வது படம் இதுதான்
கடந்த 2016ல் வெளியான படம் தோழா இதில் கார்த்தி, நாகார்ஜூன், தமன்னா நடித்திருந்தனர் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி பைடி இப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் விஜய்யின் 66வது படத்தை இவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனாவால் தடைபட்டுள்ளதால் படப்பிடிப்பு தள்ளிப்போகின்ற காரணத்தால் விஜய்யின்65வது படம் பொங்கல் ரிலீஸ் ரேஸிலிருந்து தமிழ்ப்புத்தாண்டுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த வருடமே 66வது படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.