cinema news
விஜயை முன்னணி நாயகன் ஆக்கிய பூவே உனக்காக- இன்றுடன் 26 வருடங்கள் நிறைவு
நடிகர் விஜய்யின் ஆரம்ப கால படங்கள் மசாலா படங்களாகவே இருந்தன. விஜய்யின் திரையுலக வாழ்க்கையை முன்னேற்ற அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பல வழிகளில் முயற்சி செய்தார் அவற்றில் ஒன்றுதான் விஜய்க்கு ஒரு மாஸ் ஆக இருக்கும் என்று விஜயகாந்துடன் சேர்த்து செந்தூரபாண்டி படத்தை இயக்கியது.
இந்த படம் ஓடியது. அடுத்து இயக்கிய ரசிகன் திரைப்படம் சங்கவியின் கவர்ச்சிக்காக ஓடியது எனலாம்.
அடுத்து இயக்கிய தேவா, விஷ்ணு போன்ற படங்கள் கவர்ச்சிக்காகவும் மசாலா கதைக்காகவும் நன்றாக ஓடியது எனலாம்.
இருப்பினும் விஜய் ஒரு முன்னணி நடிகராக மிளிர முடியவில்லை. இந்த நேரத்தில்தான் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கினார்.
விஜய்யின் திரையுலக வாழ்வுக்கு இப்படமே ஆதாரமாய் அமைந்தது. இப்படம் 200 நாட்கள் ஓடிய நிலையில் அடுத்ததாக வந்த காதலுக்கு மரியாதை திரைப்படமும் 200 நாட்களை கடந்து ஓடியதால் விஜய் மிகப்பெரும் புகழ்பெற்றா முன்னணி நடிகர் ஆனார்.
பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 வருடங்கள் ஆகின்றனவாம்.