கடந்த 2005ல் மதுரையில் தேமுதிக கட்சியை வெற்றிகரமாக தொடங்கினார். எந்த கட்சியுடனும் கூட்டணி சேர முடியாது என ஆரம்பித்த அவர். அதிமுக, பிஜேபி போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேரும் காலச்சூழ்நிலை உருவானது.
வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்கள் அமைத்த கூட்டணியிலும் இருந்தார்.கடந்த 2011ல் தேர்தலில் ஒரு முறை மட்டும் எதிர்க்கட்சி தலைவராகும் அந்தஸ்தை பெற்றார்.
பின்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஜயகாந்த் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின்போது கூட வர முடியாமல் மிக தாமதமாக வந்து கலைஞர் சமாதிக்கு சென்று அழுதார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக வீட்டில் ஓய்வு எடுத்து வரும் விஜயகாந்த் எப்போதாவதுதான் தலைமை அலுவலகத்துக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தலைமை அலுவலகம் வந்த விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு கை காட்டினார்.