விக்னேசுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா

விக்னேசுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் அய்யா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தாரா இன்றும் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் நடிகையாக விளங்குகிறார். எந்த ஒரு இளம் நடிகையும் இதுவரை இவ்வளவு ஆண்டுகள் முன்னணி நடிகையாக இருந்ததில்லை அந்த அளவு 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதுவும் கதாநாயகியாகவே கோலோச்சி வருகிறார் இவர்.

 

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட வருடமாக காதலித்து வருகிறார். நீண்ட வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் செப்டம்பர் 18ம் தேதியான இன்று விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் அதனால் நடிகையும் அவரது காதலியுமான நயன் தாரா அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அன்பான விக்கிக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.