தனது காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நடிகை நயன்தாரா மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நயன் விக்கியுடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில், விக்னேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை நயன்தாரா செய்திருந்தார். சிறப்பு நிற வெளிச்சம் பரவும் அறையில் விக்கி என எழுதப்பட்டிருக்க, சிவப்பு நிற ரோஜாக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்த கேக்கை வெட்டி விக்னேஷ் சிவன் கொண்டாடினார்.
இந்த விழாவில் அனிருத் மற்றும் விக்னேஷ் சிவனின் தங்கை என சிலரே கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை நயன்தாரா டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
❤️Wiki❤️ Birthday blast 💥🤗 Full of Love 💕 This one is so special 😇 @VigneshShivN #WikiNayan pic.twitter.com/uERv26FaAW
— Nayanthara✨ (@NayantharaU) September 18, 2019