படுக்கைக்கு அழைத்த தமிழ் பட தயாரிப்பாளர் – நடிகை வித்யா பாலன் பகீர் பேட்டி

219

சினிவா வாய்ப்பிற்காக தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் கனமான கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை என பெயரெடுத்தவர் நடிகை வித்யா பாலன். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் முதலில் தமிழ் சினிமாவில் நடிக்கவே வாய்ப்பு தேடினேன். ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. ஒருநாள் திடீரென அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் பேச வேண்டும் எனக் கூறினார். நான் காபி ஷாப்புக்கு வர சொன்னேன். ஆனால், உன்னிடம் நிறைய பேச வேண்டும் அறைக்கு போகலாம் என அழைத்தார். நான் கதவை திறந்து வைத்தே அவரிடம் பேசினேன். அவர் பேசிய போது அவரின் நோக்கம் எனக்கு புரிந்தது. 5 நிமிடத்தில் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அப்படத்திலிருந்து நான் விலகி விட்டேன்’ என தெரிவித்தார்.

பாருங்க:  இது போதும்! வெறென்ன வேண்டும்.. ரசிகர்களுடன் நேர்கொண்டபார்வை பார்த்த அபிராமி