cinema news
வெற்றிவேலா ஆல்பத்துக்கு சூர்யா பாராட்டு
நடிகை சங்கீதாவின் கணவர் கிரிஷ். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களில் இவரும் ஒருவர். இவரின் பல பாடல்கள் தமிழில் ஹிட் அடித்த பாடல்களாகும்.
கிரிஷ் தற்போது செய்திருக்கும் புதிய முயற்சி. கடந்த 6 மாத கொரோனா லாக் டவுன் பிரச்சினையால் திரைத்துறை சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வும் இல்லாததால் டிவோஷனல் ஆல்பம் தயாரிக்கும் முயற்சியில் கணவர் கிரிஷ், மனைவி சங்கீதாவும் இறங்கி இருக்கிறார்கள்.
அப்படியாக வெற்றிவேலா என்ற முருகன் பக்தி பாடல்களை பாடும் ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடும் முன்னணி பின்னணி பாடகர்கள் இந்த ஆல்பத்தில் பாடியுள்ளனர்.
இந்த ஆல்பத்தை நடிகர் சூர்யா வாழ்த்தியுள்ளார். எனது நெருங்கிய நண்பர் கிரிஷ் தயாரித்துள்ள ஆல்பம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு சங்கீதா நன்றியும் தெரிவித்துள்ளார்.