தமிழில் மின்னலே படத்தில் அறிமுகமானவர் இயக்குனர் கெளதம் மேனன், தொடர்ந்து காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், உட்பட பல ஸ்டைலிஷ் ஆன படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார்.
இவர் சமீப காலமாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் சமீப காலமாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியிடப்படுகிறது என்ற அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30க்கு அப்டேட் வெளியிடப்படுகிறது.