Connect with us

Latest News

மீண்டும் முன்னாள் அமைச்சர் வேலுமணியில் வீடுகளில் சோதனை

Published

on

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, நகைக்கடை, அலுவலகம், உறவினர்களின் வீடு, உதவியாளர் வீடு என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், உதவியாளர் சந்தோஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவையில் 41 இடங்கள் ,சென்னையில் 8 இடங்கள் ,சேலத்தில் 4 இடங்கள் ,திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம் , வெளி மாநிலத்தில் ஒரு இடம் என 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை, பாலக்காடு சாலை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்..பி.வேலுமணி. கடந்த 2016-21 அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுக கொறடாவாகவும் உள்ளார்.

இந்நிலையில், அவர் மீது இன்ஸ்பெக்டர் எழிலரசி கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில்,”முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளார்,”எனப் புகார் அளித்தார்.

அதன் பேரில் எஸ்.பி.வேலுமணி , அவரது சகோதரர் அன்பரசன் ,அவரது மனைவி ஹேமலதா , கான்டிராக்டர் சந்திரசேகர் ,சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேனி ,கார்த்தி ,சுந்தர் ,விஷ்ணுவர்தன் ,சரவணக்குமார் ஆகிய 10 பேர் மீதும் மற்றும் ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ், கன்ஸ்ட்ரோன்மேன் கூட்ஸ் நிறுவனம், ஆலம் கோல்டு டைமண்ட் நிறுவனம் ஆகிய 3 கம்பெனிகள் என 13 பேர் மீது கூட்டுச்சதி ,ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று வழக்குப்பதிந்தனர்.

இதைத் தொடர்ந்து சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் குழுவினர் வந்தனர். அப்போது வீட்டில் எஸ்.பி.வேலுமணி , மனைவி , மகன் உள்ளிட்டோர் இருந்தனர். வீட்டில் இருந்தவர்களை ஓரிடத்தில் அமரச் சொல்லிவிட்டு போலீஸார் தங்களது சோதனையை தொடங்கி நடத்தினர்.

அதேபோல் கோவையில் அன்பரசன் வீடு , வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் உள்ளிட்ட 41 இடங்களிலும் ,சென்னையில் 8 இடங்கள் ,சேலத்தில் 4 இடங்கள் ,திருப்பத்தூரில் 2 இடங்கள் ,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம், கேரளாவில் ஒரு இடம் என 58 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

Latest News4 weeks ago

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கூடுதலாக 2,208 இடங்கள் அதிகரிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!

Latest News4 weeks ago

சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது… அதுக்கு கால்களாவது சுத்தமாகட்டும்… உதயநிதி…!

Latest News4 weeks ago

நாளை ரிலீஸ்-க்கு ரெடி… வேட்டைக்கு ரெடியாகும் வேட்டையன்…!

Latest News4 weeks ago

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… உதயநிதி ஸ்டாலின் உறுதி…!

Latest News4 weeks ago

டாய்லெட் பிரேக் போகலைன்னா போனஸ் பாயிண்ட்… குழந்தைகளை படுத்தி எடுத்த கணக்கு டீச்சர்..!

Latest News4 weeks ago

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை இதோ…!

Latest News4 weeks ago

தக்காளி விலை உயர்வு… பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் அரசு விற்பனை…!

Latest News4 weeks ago

பொது இடத்தில் குப்பை கொட்டுனா இனி அவ்வளவுதான்..? வந்தாச்சு புது டெக்னாலஜி… மாநகராட்சி அதிரடி..!

Latest News4 weeks ago

ஹரியானா தேர்தல் வெற்றி… இணையத்தில் ட்ரெண்டாகும் ‘ஜிலேபி’… ராகுல் காந்தியை கலாய்க்கும் பாஜக…!

Latest News4 weeks ago

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!