நேரடியாக டிவியில் ரிலீஸ் ஆகும் சமுத்திரக்கனியின் படம்

26

சமீப காலங்களாக புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட ஒரு சில படங்கள் நேரடியாக தியேட்டரிலோ, ஓடிடி தளத்திலோ ரிலீஸ் ஆகாமல் நேரடியாக டிவியிலேயே ஒளிபரப்பாகிறது. அந்த வகையில் சமுத்திரக்கனியின் வெள்ளையானை என்ற படமும் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தனுஷ் நடித்த திருடா திருடி, அமீர் நடித்த யோகி, தனுஷ் நடித்த சீடன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா அவர் இயக்கியுள்ள படம்தான் வெள்ளை யானை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளனர்.
அதன்படி வருகிற ஜூலை 11-ந் தேதி இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாருங்க:  ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சிவக்குமாரின் சபதம் பாடல் வெளியீடு
Previous articleஊனமுற்ற நாய்க்கு உதவிய அமைச்சர் பி.டி.ஆர்
Next articleடோக்கியோ ஒலிம்பிக் போட்டி- ராமநாதபுரம் போலீஸ் தேர்வு