cinema news
வேலன் படத்தில் பிரபுவின் அட்டகாசமான கெட் அப்
இயக்குனர் கவின் இயக்கத்தில் வேலன் என்ற படம் தயாராகி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தில் முகேன் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், சூரி, பிரபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
பொள்ளாச்சி பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது
இப்படத்தில் நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தில்லையார் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் பிரபு இப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.