தமிழகத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆறுபடை வீடுகளுக்கும் செல்லும் வேல் யாத்திரை சில நாட்கள் முன் திருத்தணியில் தொடங்கியது.
அரசு ஒத்துழைக்காத போதும் அதை மீறி ஒவ்வொரு ஊரிலும் பாஜகவினர் கைதாவதும் யாத்திரை நடப்பதுமாக இருந்தது.
ஒரு வழியாக ஆறுபடை வீட்டையும் முடித்து விட்டு திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு விழா இன்று நடந்து வருகிறது.
இந்த விழாவுக்கும் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி விழா நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, இந்த நிறைவு விழாவுக்கு தேவையில்லாமல் காவல்துறையினர் எங்களை தடுத்தார்கள்.அமைதியான முறையில் நடந்து வரும் இந்த வேல் யாத்திரையில் நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என சொல்லியும் எங்கள் இயக்க நண்பர்களை அரெஸ்ட் செய்தனர்.
அவர்களுக்கு ஒன்றை சொல்கிறோம் வரும் தேர்தலில் நாங்கள் ஜெயித்து விட்டு இதே திருச்செந்தூர் வருவோம் என்பது உறுதி. இந்த மண்ணில் எங்கள் முதல் வெற்றி கூட்டம் நடக்கும் என உறுதிபட கூறியுள்ளார்.