cinema news
வீரமே வாகை சூடும் படம் எப்படி உள்ளது
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முன்னணி ஆக்சன் ஹீரோ நடித்துள்ள கமர்ஷியல் படமான வீரமே வாகை சூடும் விஷால் நடிப்பில் இன்று வெளி வந்துள்ளது.
வீரமே வாகை சூடும் என்ற இந்த படத்தை இயக்குனர் து.பா சரவணன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் இப்படத்தில் பெரிய அளவில் சோபிக்கவில்லை ஆனால் பின்னணி இசையில் தெறிக்க விடுகிறார்.
சண்டைக்கோழி ,பாண்டிய நாடு இன்னும் சில பரபர ஆக்சன் படங்களின் டைப்பில் வீரமே வாகை சூடும் படம் வெளிவந்துள்ளது.
சாதாரண ஹீரோ, வில்லன் மோதல் படம்தான் ஆனால் பல காட்சிகள் சீட்டின் நுனிக்கே வரவைப்பதாய் உள்ளது.
விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார்.
வில்லனாக பாபுராஜ் நடித்திருக்கிறார். மூன்று விதமான கிளை கதைகளை ஒன்றாக சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் இயக்குனர் து.பா சரவணன்.
வீரமே வாகை சூடும் கண்டிப்பாக பார்க்கலாம்.