cinema news
வரலட்சுமிக்கு குவியும் பாராட்டுக்கள்
ஆந்திராவில் பொங்கலை ஒட்டி வெளியான படம் க்ராக் இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக ரவி தேஜா நடித்துள்ளார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் தூள் பட சொர்ணக்கா ரேஞ்ச்ல வரலட்சுமி வில்லி வேடம் ஏற்றுள்ளார்.
ஜெயம்மா என்ற இந்த கேரக்டர் ஆந்திர முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே தமிழில் வரலட்சுமி சண்டக்கோழி 2, சர்க்கார் படங்களில் வில்லி ரேஞ்ச்ல நடித்திருந்தாலும் இந்த படம் தான் அதிகம் கொண்டாடப்படுகிறது. காரணம் இந்த படத்தில் மிக கொடூரமான வில்லியாக இவர் நடித்துள்ளதால் ஆந்திர மீடியாக்கள், ரசிகர்கள் இந்த ஜெயாம்மாவைத்தான் புகழ்கின்றனர்.