Biggboss

தர்ஷனை எச்சரித்தேன்… ஷெரினை நம்பினான்… இப்ப என்னாச்சு? – வனிதா விஜயகுமார் டிவிட்

நடிகை ஷெரினின் திட்டத்தால்தான் தர்ஷன் வெளியேறும் நிலை ஏற்பட்டது நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை காதலிப்பது போல் ஷெரின் நடந்து கொண்டார். தர்ஷனின் வெற்றியை தடுக்கும் பொருட்டு ஷெரின் இப்படி திட்டமிட்டு நடந்து கொள்கிறார் என வனிதா ஷெரினுடன் மோதலில் ஈடுபட்டார். தர்ஷனையும் எச்சரித்தார். ஆனால், தர்ஷன் வனிதாவை நம்பவில்லை. ஷெரினையே நம்பினார்.

darshan

ஆனால், தற்போது ஷெரின் உள்ளே இருக்க தர்ஷன் வெளியேறிவிட்டது வனிதா கூறியது சரியோ என்கிற எண்ணம் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வனிதா விஜயகுமார் ‘தொடக்கத்தில் ஷெரினை ஊக்கப்படுத்தினேன். ஆனால், அவரின் விளையாட்டு எனக்கு புரிந்ததும் தர்ஷனை எச்சரித்தேன். ஆனால், நான் அவனை டார்கெட் செய்வதாக நினைத்து ஷெரினை நம்பினான். புரியவைக்க முயற்சி எடுத்தேன். என்னை என்னை அவர்கள் நம்பவில்லை’ என பதிவிட்டுள்ளார்.