Connect with us

Tamil Crime News

வாணியம்பாடி கொலை- காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாணியம்பாடியில் நேற்று முன் தினம் மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி வாசிம் அக்ரம் என்பவர் அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகை செய்து விட்டு வரும்போது மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

இவரது உடலை உடனே வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு அங்குள்ளவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எதற்காக வேலூர் அனுப்பினீர்கள் என அங்குள்ள போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட வாசிம் அக்ரமுக்கும் அங்குள்ள கஞ்சா வியாபாரிகள் டீல் இம்தியாஸ் உட்பட இருவரால் தொடர் தொல்லை பகை இருந்து வந்துள்ளது. இது பற்றி தெரிவித்தும் காவல்துறையில் புகார் எடுக்கவில்லை.

இதனால் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பாருங்க:  சசிக்குமார் பிறந்த நாள் கவிதை எழுதி வாழ்த்து தெரிவித்த தனுஷ் பட இயக்குனர்

Latest News

சமூக வலைதளம் மூலம் பயங்கரவாத ஆதரவு திரட்டிய திருவாரூர் நபர் கைது

மதுரை காஜிமார் கடந்த 2020ல் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாபா என்பவருடன் தொடர்பு உள்ளதாகவும் அவர்களுடன் சேர்ந்து சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் என்.ஐ ஏ அதிகாரிகள் இன்று மன்னார்குடி சென்று பாபா பக்ரூதின் என்ற அந்த நபரை கைது செய்துள்ளனர்.

பாருங்க:  பழனி முருகன் கோவிலில் முன் பதிவு கட்டாயம்
Continue Reading

Latest News

கிராம கோவிலில் இருந்த மர்ம துப்பாக்கி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆளிப்படியில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டி விட்டு சென்ற பூசாரி திரும்ப வந்து அடுத்த நாள் கோவிலை திறந்த உடன் ஒரு துப்பாக்கியும் அதற்குரிய உறையும் இருந்தது.

அதிர்ச்சியைடைந்த அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.போலீசார் அந்த துப்பாக்கியையும் உறையையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட அந்த துப்பாக்கியை வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி வந்துள்ளனர்.

ஆனால் இந்த கோவிலில் ஏன் விட்டுசென்றனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பாருங்க:  ரூ.2000 சிறப்பு நிதியுதவி பட்டியல் வெளியீடா? #ரூ2000ஆயிரம்வழங்கும்திட்டம்!
Continue Reading

Latest News

கஞ்சா உபயோகிப்பு- தட்டி கேட்ட அக்கா கணவர் படுகொலை

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கோகுல்நாத் எஸ்டேட் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் திருமணம் முடிந்து 5 வருடமாகிறது  அழகான குழந்தையோடு இனிமையாக சென்றது இவர்களது வாழ்க்கை. குடும்பத்தாரோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த கோகுல்நாத்தை சொந்த மைத்துனர் பாலமுருகன் சுத்தியலால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலமுருகன் அடிக்கடி கஞ்சா குடிப்பதை அறிந்த கோகுல்நாத் சொந்த மைத்துனர் தானே என கண்டித்துள்ளார். ஆனால் கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த பாலமுருகன் அக்கா கணவர் என்றும் பாராமல் சுத்தியலை எடுத்து தாக்கியதில் கோகுல்நாத் இறந்து விட்டார்.

இதனால் குடும்பத்தினரே பாலமுருகனை ஒரு ரூமிற்குள் அடைத்து வைத்து விட்டனர். பின்பு போலீஸ் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  2019 TNPSC Group 2 தேர்வில் பழைய முறை; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!
Continue Reading

Trending