பிக்பாஸ் வீட்டிற்கு வனிதாவின் ஒரு செல்ல மகள்களும் வந்து அமர்க்களப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஃபிரீஸ் டாஸ்க்(Freeze task) கொடுக்கப்படவுள்ளது. அதாவது, போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினரை உள்ளே அனுப்புவார்கள். ஏற்கனவே முகேனின் அம்மா, சகோதரி, லாஸ்லியாவின் மொத்த குடும்பமும் ஆகியோர் வந்திருந்தனர். அதேபோல், தர்ஷனின் தாய் மற்றும் சகோதரி வீட்டிற்குள் வந்துள்ளனர். இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை வெளியானது.
இந்நிலையில், வாயாடி பெத்த புள்ள பாடல் ஒலிக்கவிட்ட பிக்பாஸ் வனிதாவின் இரு மகள்களையும் உள்ளே அனுப்பினர். அவர்கள் இருவரிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் கண்ணாமூச்சி விளையாடும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
#Day81 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/nl2FFNYoAK
— Vijay Television (@vijaytelevision) September 12, 2019