தர்ஷனின் காதலி எழுப்பிய கேள்வி – டிவிட்டை டெலிட் செய்த வனிதா விஜயகுமார்

246
sanam shetty

தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி எழுப்பிய கேள்வியால் வனிதா விஜயக்குமார் தனது டிவிட்டை டெலிட் செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்ட வனிதா அந்நிகழ்ச்சி தொடர்பாக தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இவருக்கும், தர்ஷனுக்கும் தொடக்கத்தில் இருந்தே ஒத்துவரவில்லை. எனவே, அவரை எப்போதும் வனிதா டார்கெட் செய்து கொண்டே இருந்தார்.

சமீபத்தில் தர்ஷன் ஷெரினிடம் நெருக்கமாக பழகுவதை பார்த்து அவரது காதலி சனம் ஷெட்டி மனமுடைந்து மனநல சிகிச்சை எடுத்து வருகிறார் என டிவிட் செய்திருந்தார். இதை அறிந்த சனம் ஷெட்டி, டிவிட்டரில் ஒரு கணக்கை தொடங்கி வனிதாவுக்கு அளித்த பதிலில் கூறியதாவது:

உங்களிடம் பதில் கூற டிவிட்டர் கணக்கை துவங்கியுள்ளேன். நான் மனநல சிகிச்சை எடுத்துக்கொண்டதாக நீங்கள் எங்கே கேள்விப்பட்டீர்கள் என எனக்கு தெரியவில்லை. அதில் கண்டிப்பாக உண்மையில்லை. ஒருவேளை சாக்‌ஷி இப்படி உங்களிடம் கூறியிருந்தால் நான் அவரிடம் கேட்கிறேன்’ என பதிவிட்டுருந்தார்.

இதைக்கண்ட வனிதா அவரின் டிவிட்டையே நீக்கி விட்டார்.

பாருங்க:  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மாணவர் உதித் சூர்யா கைது