Connect with us

Latest News

குடும்ப பெரியவர்களிடம் ஆசி பெற்ற வானதி சீனிவாசன்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமாக இருப்பவர் வானதி சீனிவாசன்.

இவரது மகனான ஆதர்ஷ் என்பவர் இரு தினங்களுக்கு முன்பு கோவையில் இருந்து பலினோ காரில் சென்னை செல்லும்போது சேலம் அருகே கார் கவிழ்ந்ததில் லேசான காயமுற்றார்.

இந்த நிலையில் வானதி சீனிவாசன் அவரது மகன் உள்ளிட்டோர் நேற்று குலதெய்வம் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு குடும்ப பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.

பாருங்க:  மே 14 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

Latest News

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி

டெல்லியில் உள்ளது புகழ்பெற்ற ரோகிணி கோர்ட். இந்த கோர்ட் வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பலரும் சிதறி ஓடினர்.

இங்குள்ள கோர்ட் எண் அறை 207 அருகே பரபரப்பாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது அனைவரும் சிதறி ஓடினர்.

முழு தகவல் கிடைக்காத நிலையில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையை போக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவனுடன் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாருங்க:  சூர்யா பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
Continue Reading

Latest News

தனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்

ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமாக விளங்கிய என்.டி ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் இவரின் படங்களுக்கு என ஆந்திராவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகராக தெலுங்கு திரையுலகில் விளங்கும் ஜூனியர் என் டி ஆர் ஒரு லம்போகினி கார் வாங்கியுள்ளார்.

இந்த காரின் மதிப்பு ரூ 3 கோடி. இந்த காருக்காக 9999 என்ற பேன்சி நம்பரை வாங்கியுள்ளார், இந்த நம்பருக்காக அவர் 17 லட்சம் செலவு செய்துள்ளாராம்.

பாருங்க:  நாளை மஹாளய அமாவாசை- கோவிட் 19 தடையால் எப்படி பித்ரு தர்ப்பணம் செய்யலாம்
Continue Reading

Latest News

தமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா

தமிழக அரசுக்கு சொந்தமாக வெளியூர் செல்லும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.

கடந்த மே மாதத்தில் இருந்து கொரொனா தொற்று காரணமாக லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் பஸ்கள் இயங்கவில்லை. பின்பு பஸ்கள் சிறிது சிறிதாக இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் வெளியூர் செல்ல ஏசி பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஏசி பேருந்துகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

பாருங்க:  சூரரை போற்று படத்தின் மேக்கிங் வீடியோ
Continue Reading

Trending