சன் டிவியில் நேரடி ரிலீஸ் ஆகும் வணக்கம்டா மாப்ள

70

பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல நகைச்சுவை படங்களை இயக்கியவர் ராஜேஸ் எம். சில காலங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களாக கொடுத்து வரும் இவர் வெற்றிக்காக போராடி வருகிறார்.

இப்போது சன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வணக்கம்டா மாப்ள படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஏப்ரல் 14ல் சன் டிவியிலேயே நேரடியாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்போது சன் டிவி விசேஷ தினங்களுக்கு என இது போல படங்களை உடனடியாக தயாரித்து ரிலீஸ் செய்து வருகிறது.

இதற்கு முன் பொங்கலுக்கு புலிக்குத்தி பாண்டி படத்தை டிவியில் நேரடி ரிலீஸ் செய்து படமும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  மக்களிடம் செல்வாக்கு இருக்கு... அரசியலுக்கு வந்தே தீருவேன் - அடம்பிடிக்கும் பிக்பாஸ் நடிகை
Previous articleவரலட்சுமியின் சேஸிங் படப்பாடல்
Next articleபிரசாந்தின் அந்தகான் படத்தில் நடிக்கும் பிரபல பரதநாட்டிய டான்ஸர்