காம கொடூரத்தின் உச்சம் – மயக்க ஊசி செலுத்தி 4 வயது சிறுமியை நாசம் செய்த வேன் ஓட்டுனர்!

340

கோவையில் பள்ளிக்கு செல்லும் சிறுமியை வேன் ஓட்டுனர் மற்றும் அவரின் உதவியாளர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவைக்கு அடுத்துள்ள காரமடையில் வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களை பள்ளிக்கு அழைத்து வர பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பள்ளியில் எல்.கே.ஜி படிக்கும் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கை, கால் வலி, மயக்கம் ஆகிய பாதிப்பகள் ஏற்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை தினமும் வேனில் பள்ளிக்கு அழைத்து சென்ற வேன் ஒட்டுனர் கோவிந்தராஜ்(37) மற்றும் அவரின் உதவியாளர் மாரிமுத்து (55) ஆகியோர் சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பாருங்க:  வெளியான வீடியோ ; காம கொடூரன் மோகன்ராஜ் சிக்கியது எப்படி? : பகீர் தகவல்