Latest News
வள்ளலார் நினைவு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
150 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் வடலூரில் வாழ்ந்தவர் வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்.
எல்லா உயிருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற நோக்கில் எந்த நேரமும் சாப்பாடு எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கும்படி தன்னுடைய சத்திய ஞானசபையில் அனைவருக்கும் சாப்பாடு கிடைக்கும்படி அணையா அடுப்பை நிறுவியவர்.
இன்று வள்ளலாரின் நினைவு நாள் இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாடிய பயிரை கண்டால் மனம் வாடும் இரக்கமும் பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும் சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி அன்பும் மனித நேயமும் தழைத்திட செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் டுவிட் இட்டுள்ளார்.