cinema news
வலிமை அப்டேட்- கோவில் பூசாரியையும் விட்டு வைக்காத ரசிகர்கள்
அஜீத் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில் அஜீத் ரசிகர்கள் ஒரு சில வருடங்களாக பார்ப்பவர்களிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள்.
பாரதிய ஜனதா எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முன்னாள் முதல்வர் எடப்பாடியிடமும் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது வலிமை அப்டேட் கேட்டனர்.
சில நாட்களுக்கு முன் ஒரு குடு குடுப்பை காரரிடம் வலிமை அப்டேட் எப்ப வரும் என்று கேட்டனர். இந்நிலையில் கோவிலில் சாமியாடும் பூசாரி ஒருவரிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சாமியாடும் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்கும் அஜீத் ரசிகர்கள்!😁😁😁😁#Valimai pic.twitter.com/mUmxq5XEcu
— Avudaiappan (@ImAvudaiappan) July 4, 2021