வந்தாச்சு வலிமை அப்டேட்

29

கடந்த இரண்டு வருடங்களாக அஜீத் நடித்த எந்த படமும் வெளிவரவில்லை கடந்த 2019ல் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின் எந்த படமும் வெளிவரவில்லை. அந்த படத்தை இயக்கிய ஹெச்.வினோத்தின் இயக்கத்திலேயே அடுத்த படமும் நடிக்க அஜீத் முடிவு செய்த அஜீத் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இருந்தாலும் இப்படத்தை பற்றிய எந்த செய்திகளையும் வெளிவராமல் பார்த்துக்கொண்டனர். நடுவில் கொரோனா கால குழப்பங்கள் வேறு சுழன்றடித்தது இதனால் அப்டேட் என்பது அஜீத் ரசிகர்களுக்கு கானல் நீரானது.

வலிமை அப்டேட் என்ற பெயர் எல்லோராலும் உச்சரிக்கப்படும் அளவுக்கு டிரெண்ட் ஆனது.

இப்போது வலிமை அப்டேட் மே 1ல் வெளியாகும் என அஜீத்தின் மானேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அஜீத் மானேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

பாருங்க:  பிக்பாஸ் போட்டியாளருக்கு கொரோனா
Previous articleதேர்தலில் வென்றால் கோவில்பட்டியில் இருக்க மாட்டேன் – தினகரன்
Next articleகோவையில் கம்பு சுற்றிய கமல்ஹாசன்