வலிமை அப்டேட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வீரரிடம் கேட்ட அஜீத் ரசிகர்கள்

9

ஒரு வருடத்திற்கும் மேலாக வலிமை படம் தயாராகி வருகிறது. நடுவில் கொரோனா காலங்களில் படப்பிடிப்பில் தாமதம் எல்லாம் ஏற்பட்டதால் வலிமை படத்தை பற்றிய எந்த ஒரு செய்தியும் வரவில்லை.

எங்களுக்கு ஒரு அப்டேட் ஆவது கொடுங்கள் என அஜீத் ரசிகர்கள் குழப்பத்தில் திரிகின்றனர். யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட் என்ற ரீதியில் இருக்கின்றனர்.

சமீபத்தில் சென்னையில் நடந்த இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வினிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர்.

அது போல் சம்பந்தமே இல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மோயின் அலியிடமும் அப்டேட் கேட்டுள்ளனர்.

இதை ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதன் லிங்க்

https://www.facebook.com/ashwinMIB/videos/1323083434733974

பாருங்க:  ஸ்டாலின் தவறாக பரப்பி வருகிறார்- எடப்பாடி