Published
11 months agoon
அஜீத் நடித்துள்ள வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த கோவை நகரிலும் இன்று ரிலீஸ் ஆகியுள்ள சூழலில் தியேட்டர் வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளாக வெளியானது. திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கூடியிருந்தனர். பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை நூறடி சாலையில் கங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரொல் குண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் விழுந்து வெடித்தது. இதில் ஒரு இருசக்கர வாகனம் லேசான சேதம் அடைந்தது.அங்கு நின்று கொண்டு இருந்த ராமசந்திரன் என்பவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.
திரையரங்கம் முன்பு இருந்த ரசிகர்கள் இது குறித்து காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.அதிகாலை நேரத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலிமை படத்தை பார்த்துவிட்டு போதை பொருள் கடத்துபவர் குறித்து வினோத்திடம் விசாரிக்க உத்தரவு
ஹோட்டல் ஊழியரை பாராட்டிய வலிமை நாயகி ஹூமா குரேசி
வலிமை பற்றி ப்ளூ சட்டை மாறன் போட்ட மோசமான பதிவு- தயாரிப்பாளர் கோபம்
விவேகம் படத்துக்கு பிறகு மீண்டும் மிக மட்டமாக அஜீத் வலிமையை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன்
வலிமை படம் வெளியிட தாமதம் ஆனதால் நாட்டு வெடியை கட்டி தியேட்டர் கதவை பெயர்க்க முயன்ற ரசிகர்கள்
வலிமை – விமர்சனம்