Latest News
நெருங்குகிறது வலிமை புயல்- உச்சகட்ட எதிர்பார்ப்பில் அஜீத் ரசிகர்கள்
அஜீத் நின்றால் நடந்தால் எல்லாமே அஜீத் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்தான். அஜீத் படத்தில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் எல்லாமே அஜீத் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் ஆகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அஜீத் இரண்டு வருடங்கள் முன்பு நடிக்க ப்ளான் போட்ட படம் வலிமை.
இந்த படம் ஆரம்பித்த நேரத்தில் கொரோனா வந்தது. இதனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட நீண்ட கால தாமதம் ஆனது.
அதற்குள் வலிமை படம் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் தெரியாததால் அஜீத் ரசிகர்கள் களைத்து போயினர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி, தற்போதைய பிஜேபி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வரை எல்லோரிடமும் வலிமை அப்டேட் கேட்டனர்.
ஒரு வழியாக வலிமை அப்டேட்டும் வந்தது. படமும் பொங்கலுக்கு வர இருந்த நிலையில் விதி ஒமிக்ரான் வடிவத்தில் வந்து ரிலீஸ் ஆகாமல் கெடுத்து விட்டது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 24ல் வலிமை படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
#Valimai New Song Promo. #Valimaifrom February24 pic.twitter.com/ALcJeo6Ptm
— Boney Kapoor (@BoneyKapoor) February 16, 2022
