Thala Ajith

என்னிடம் இருந்து எந்த அப்டேட்டும் வராது! அஜித் பட தயாரிப்பாளர் தகவல்!

அஜித் நடிக்கும் வலிமைப் படத்தின் அப்டேட் எதுவும் கொரோனா லாக்டவுன் முடியும் வரை வெளிவராது என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் 60 ஆவது படமான வலிமை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தடை பட்டுள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் போலீஸ் அதிகாரியாகவே நடித்துவருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் பைக் ரேஸராக மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் நிறைந்துள்ள இப்படம் வருகிற 2021ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றிய அப்டேட்டுகளை அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரிடம் கேட்டவண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் ’உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை தான் தயாரிக்கும் எந்த படம் குறித்த அப்டேட்டும் வராது’ எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.