தமிழ்நாட்டில் உள்ள சினிமா நடிகர்களில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு இருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் போல் யாரும் இல்லை என்றே சொல்லலாம். பல வருடங்களாக வெறித்தனமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். தீனா படத்தில் இருந்து ரசிகர்களால் இவர் செல்லமாக தல என அழைக்கப்படுகின்றார்.
அஜீத் ரசிகர்கள் என்று சொல்வதை விட தல ரசிகர்கள் என்று இவர்களை சொன்னால் மிகையாகாது. தல ரசிகர்கள் தீபாவளிக்கு தங்கள் தலைவரின் படம் வரவில்லை என்றால் கூட எங்களுக்கு இது கருப்பு தீபாவளி என போஸ்டர் அடித்து ஒரு காலத்தில் ஒட்டுவார்கள். அது ஒரு காலம் இப்போதெல்லாம் அஜீத் நடித்த படத்தின் அப்டேட், மற்றும் போஸ்டர்ஸ் எதுவும் வரவில்லை என்றால் கூட மனதளவில் சோர்ந்து போய்விடுகிறார்கள்.
அப்படி சோர்ந்து விட்ட ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வலிமை படத்தின் அப்டேட்ஸாக அஜீத்தின் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அஜீத் பைக்கில் மிரட்டும் இந்த காட்சியை பார்த்த உடன் இது என்ன வகையான பைக் என அஜீத் ரசிகர்கள் தேட ஆரம்பித்துள்ளனராம்.