Connect with us

வலிமை படத்தை பார்த்துவிட்டு போதை பொருள் கடத்துபவர் குறித்து வினோத்திடம் விசாரிக்க உத்தரவு

Entertainment

வலிமை படத்தை பார்த்துவிட்டு போதை பொருள் கடத்துபவர் குறித்து வினோத்திடம் விசாரிக்க உத்தரவு

வலிமை படம் பார்த்த முதல்வர் உண்மையிலேயே தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதா என விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பைக் ரேஸ் கும்பலை சேர்ந்தவர்கள் நகை பறிப்பு, கொலை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவது, இவர்கள் வேலையில்லாத இளைஞர்கள், மனஅழுத்தத்தில் உள்ளவர்களை குறிவைத்து தங்கள் வலையில் சிக்க வைப்பது போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு தான் வலிமை படத்தை இயக்கி உள்ளார் ஹெச்.வினோத்.

வலிமை படத்திற்கு எதிராக கதை திருட்டு வழக்கு போடப்பட்ட போது, இது செய்திதாள்களில் வந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த கதையை உருவாக்கியதாக கூறியிருந்தார் வினோத்.

இந்நிலையில் நெட்ப்ளக்ஸ்ஸில் வெளியான வலிமை படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டீமிடம் டைரக்டர் வினோத்திடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். எந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாக வைத்து இந்த கதையை வினோத் இயக்கினார்? உண்மையிலேயே தமிழகத்தில் அப்படி ஏதாவது போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதா என்ற விசாரணையை வினோத்திடம் இருந்தே துவக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாருங்க:  வலிமை படம் -இயக்குனர் கொடுத்த புதிய அப்டேட்

More in Entertainment

To Top