வலிமை பட அப்டேட்

வலிமை பட அப்டேட்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹெச். வினோத் தனது சிறப்பான இயக்கத்தால் அஜீத் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

முதலில் அஜீத்தின் நேர்கொண்ட பார்வையை இயக்கினார் இப்படம் கடந்த வருடம் ஆகஸ்டில் வந்தது. இப்போது அடுத்ததாக வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தை பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்தார். தற்போது வலிமை படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

கடந்த 6 மாதமாக கொரோனா ஊரடங்கால் இப்படம் பற்றிய அடுத்த அப்டேட் எதுவும் வராமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ள கார்த்திகேயன் என்பவர் தன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அவர் அஜீத் ரசிகர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்க எதிர்பார்த்தத விட சிறப்பான அப்டேட் இப்படம் பற்றி வர போகுது என கூறியுள்ளார்.