Entertainment
வலிமை பட ரிலீஸ் தள்ளி வைப்பு
அஜீத் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கலை ஒட்டி அதற்கு முன்னதாகவே போகிக்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில் வலிமை படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
நேற்று முன் தினம் கூட வலிமை படம் உறுதியாக சொன்ன நாளில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இப்படியொரு அறிவிப்பு அஜீத் ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் நிலைமை சீரான உடன் வலிமை திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
