Connect with us

வலிமை பற்றி ப்ளூ சட்டை மாறன் போட்ட மோசமான பதிவு- தயாரிப்பாளர் கோபம்

Entertainment

வலிமை பற்றி ப்ளூ சட்டை மாறன் போட்ட மோசமான பதிவு- தயாரிப்பாளர் கோபம்

இந்த ப்ளூ சட்டை மாறன் என்றாலே எப்போதும் பஞ்சாயத்துதான் சினிமாவை விமர்சனம் செய்கிறேன் என சினிமாவை  அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து விமர்சனம் செய்து விடுவார்.

மேலும் சில சினிமா விமர்சனங்களில் தனி நபர் தாக்குதல், ஒருமையில் பேசுதல்  மிக மோசமாக விமர்சனம் செய்தல் என இவரின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விவேகம் படம் வெளியானபோது அந்த படத்தை விமர்சனம் செய்கிறேன் என இவர் அந்த படத்தை பற்றி மட்டமாக பேசியதால் தமிழகம் முழுவதும் அஜீத் ரசிகர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.

எல்லா படத்தையும் இவர் தொடர்ந்து கழுவி ஊற்றி விமர்சனம் செய்வார். இதனால் பல தயாரிப்பாளர்கள் இவர் மீது கோபத்தில் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் பற்றி மிக மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் மேலும் தனது டுவிட்டர் பேஜில் புரோட்டாவுக்கு மாவு பிசைவது போல் ஆடும் இந்த டான்ஸை தியேட்டரில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார் என ஒரு டிவிட் போட்டுள்ளார்.

இதை பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் படத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாத கருத்து இது. இதை பார்த்தால் கோபமாக இருக்கிறது. இது தனிப்பட்ட கருத்து முற்றிலும் தவறானது என இதற்கு பதிலளித்துள்ளார்.

 

பாருங்க:  வலிமை அப்டேட்டை குடுகுடுப்பைகாரனிடம் கேட்கும் அஜீத் ரசிகர்கள்

More in Entertainment

To Top