Entertainment
வலிமை படம் போல் ஆக்ஷன் காட்சிகள் எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது- ஹூமா குரேசி
பிரபல நடிகை ஹூமா குரேசி. இவர் ரஜினி நடித்த காலா படத்தில் நடித்தவர். தற்போது வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்துள்ளார்.
எல்லோரும் அஜீத்துக்கு ஜோடி என்று நினைப்பார்கள் அப்படி இல்லையாம். ஒரு கதாநாயகனும் ஒரு பெண்ணும் சந்தித்துவிட்டாலே எப்படியாவது அவர்களுக்குள் காதல் வந்துவிட வேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் மத்தியில் இதில் ஹெச். வினோத் வித்தியாசமாக முயற்சி செய்துள்ளாராம். அஜீத்துக்கும் ஹீமா குரேசிக்கும் காதல் ஏற்படுவது போல காட்சிகள் இல்லையாம்.
அதற்கு மாறாக ஹூமா குரேசியும் ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளாராம்.
இந்த படத்தில் இருப்பது போல் எந்த படத்திலும் ஆக்சன் காட்சிகளை பார்த்திருக்க முடியாது என ஹூமா குரேசி கூறியுள்ளார்.
