Corona (Covid-19)
கமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க
தமிழகத்தில், கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 எட்டி உள்ளது.

Kamal-Parthiban-Vairamuthu
இந்த நிலையில் நடிகர்கள் கமல், பார்த்திபனை தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து தமிழக மக்களை நெகிழ செய்துள்ளார். நடிகர்கள் கமலும் பார்த்திபனும் ஏற்கனவே தங்கள் வீடுகளை கொரொனா சிகிச்சைக்காக தர தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்தும் கொரொனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்களின் திருமண மண்டபத்தை அரசுக்கு ஒப்படைப்பதாக கடிதம் எழுதி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக
எங்கள் திருமண மண்டபத்தை
(பொன்மணி மாளிகை)
அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம்
கடிதம் எழுதியிருக்கிறேன்.
நாட்டின் நலமே நமது நலம்.— வைரமுத்து (@Vairamuthu) April 7, 2020
