கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும், என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும், முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ என அழகான வரிகளை தமிழ்சினிமாவில் தந்தவர் கவிஞர் வைரமுத்து.

கடந்த சில வருடங்களாகவே கவிஞர் வைரமுத்து பற்றி எதிர்வினையான செய்திகளே வந்து கொண்டிருந்தன.

சின்மயி சொன்ன மீடு பஞ்சாயத்துக்கள் இப்போதான் சற்று முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஒரு வருடம் முன் வைரமுத்து உடல் நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இப்போது மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது இதய நோய் பிரச்சினைக்காக வைரமுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது