Tamil Flash News
அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திமுக தரப்பில் தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கில் வைகோ எம்.பி. விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி மதிமுகவை உடைக்க சதி செய்கிறார் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதாக வைகோ மீது திமுக தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
13 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி வைகோவை விடுதலை செய்து உத்தரவிட்டார். எம்.பி. எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
வைகோவுக்கு எதிரான புகாரில் பத்திரிக்கை செய்தி ஆதாரத்தை தவிர வேறு எதுவுமில்லை என நீதிபதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது
