படத்தை ஓட வைக்கவே இந்த தந்திரம் – விஜயை தாக்கும் வைகைச் செல்வன்

218

கதையில்லாத தனது படங்களை ஓட வைக்கவே விஜய் இப்படி பேசி வருகிறார் என விஜயின் கருத்துகளுக்கு அதிமுக எதிர்வினை ஆற்றியுள்ளது.

நேற்று சென்னையில் நடந்த பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆளும் அரசுக்கு எதிராக பல பரபரப்பு கருத்துகளை கூறினார்.

ஜெயஸ்ரீ மரணத்தில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல் லாரி ஓட்டுனரையும், பேனர் தயாரித்தவரையும் குறை சொல்கிறார்கள் எனக்கூறினார். அதேபோல், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனவும் அவர் அதிரடியாக பேசினார்.

ஆளும் அதிமுக தரப்பினரையே அவர் கூறியிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். விஜயின் இந்த பேச்சு அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலரும் எதிர்வினையாற்ற துவங்கிவிட்டனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச் செல்வன் ‘ கதையில்லாத படங்களை எடுத்து அதை ஓட வைக்கவே நடிகர்கள் இப்படி பேசி வருகிறார்கள். அதில் விஜயும் சேர்ந்துள்ளார். இப்படி பரபரப்பு கருத்தை கூறி அதை வைத்து தனது படத்தை 2 மாதம் ஒட்டவே அவர் திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். ஜெயஸ்ரீ விவகாரத்தில் அரசு எல்லாம் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. தெரிந்துதான் மக்கள் அதிமுக அரசை அமர வைத்துள்ளனர்’ என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

பாருங்க:  5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் விலக்கு?