Published
1 year agoon
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் ஸ்டாலின். ஸ்டாலின் முதல்வரான பிறகு நேரில் சந்தித்து பேசினார் நடிகர் வடிவேலு. கொரோனா நிவாரண நிதியும் வழங்கினார்.
கடந்த 2011ல் நடந்த தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறேன் என எதிர்க்கூட்டணி விஜயகாந்த்தை ஏசுகிறேன் என வாய்க்கு வந்தபடி பேசியதால் அதன் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்ததாலும் வடிவேலு படங்கள் இன்றி பாதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்து பேசிய பிறகுதான் என் வாழ்வில் மீண்டும் நல்ல விசயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பித்து இருக்கிறது எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் நேற்று சேப்பாக்கம் எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதியை சந்தித்து பேசியுள்ளார் வடிவேலு.
இதன் மூலம் ஆளும் தரப்புடன் அதிக நெருக்கம் காட்டுகிறார் வடிவேலு என கூறப்படுகிறது.