Entertainment
ஏன் நடிக்கவில்லை என்பதற்கு வடிவேலு விளக்கம்
நேற்று செப்டம்பர் 12ம் தேதி வடிவேலுவின் பிறந்த நாள் என்பதால் அவர் பற்றிய செய்திகளே சமூக வலைதளங்களில் வட்டமடித்தது. இந்த நிலையில் இன்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது,செப்டம்பர் 12 என்னுடைய பிறந்த நாள் மக்களை சிரிக்க வைப்பதால் நான் தினம் தினமும் நகைச்சுவை செல்வமா பிறந்துக்கிட்டுதான் இருக்கேன்.
தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். என்னை பெற்ற அம்மாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
மக்கள் சக்தி இல்லேன்னா இந்த வடிவேலுவே கிடையாது. எங்க அம்மா என்னை பெறவில்லையென்றால் நானே கிடையாது. மக்கள்தான் எல்லாம்.
இன்னொரு கேள்வி கூட நீங்க கேட்கலாம் ஏன் இன்னும் நடிக்காம இருக்கார்னு கேட்கலாம். ஒண்ணுமில்ல சீக்கிரம் ஒரு அருமையான எண்ட்ரியோட நான் வந்து உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.
